அமெரிக்காவில் ரூ 142 கோடிக்கு பங்களா வாங்கிய நடிகை... பெரிய நீச்சல் குளம், 7 பெட்ரூம் 11 பாத்ரூம்,  சினிமா தியேட்டர்...  

by Chandru, Nov 18, 2019, 10:39 AM IST
Share Tweet Whatsapp

வாழ்ந்தால் இப்படி வாழணும் என்று எல்லா நடிகைகளும் பொறாமைப்படும் அளவுக்கு தனது அந்தஸ்த்தை பல மடங்கு உயர்த்திக்கொண்டிருக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் இந்தி, ஹாலிவுட் படங்களில் பிரபலம் ஆவதற்கு முன் முதலில்  தமிழில்தான் ஹீரோயினாக அறிமுகமானர். 2002ம் ஆண்டு விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு தமிழ் படம் பக்கம் தலைகாட்டவில்லை. இந்திக்கு சென்றவர் முன்னணி நடிகையாகி பிறகு பாலிவுட்டில் நடிக்க சென்றார். குவான்டிகோ ஹாலிவுட் சீரியலில் கதாநாயகியாக நடித்தார் பிரியங்கா.

இதற்கிடையில் தன்னை விட வயதில் இளையவரான அமெரிக்கா பாப் பாடகர் நிக் ஜோன்சை காலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு அமெரிக்காவில் செட்டிலானார். எவ்வளவோ பண்ணிட்டோம இத பண்ண மாட்டோமா என்று விஜய் பஞ்ச் வசனம்போல் இதுவரை இந்திய நடிகைகள் யாரும் வாழ்ந்திராத வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு தனது கனவு இல்லமாக பிரமாண்ட பங்களாவை வாங்க முடிவு செய்தார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இயற்கை எழில் மிகுந்த சான்பெர்னாண்டோ பள்ளத்தாக்கு பகுதியில் பங்களா வாங்க எண்ணியவரக்கு அவருக்காக  20 ஆயிரம் சதுர அடி பரப்பளவு பங்களா காத்திருந்தது.  ஆடம்பர வசதிகளை அடுக்கடுக்காக கொண்டிருக்கும் இந்த பங்களாவின் அமெரிக்க மதிப்பு 20 மில்லியன் டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை 1,43, 27, 00, 000.00 . அதாவது சுமார் ரூ.144 கோடி. ஆகும்.

இந்த பங்களாவில் 7 பெட்ரூம், 11 பாத்ரூம், நீச்சல் குளம், பவுலிங் அரங்கம்,  சினிமா தியேட்டர், கூடைபந்து விளையாட்டுக்கான இன்டோர் ஸ்டேடியம், பார், ரெஸ்டாரண்ட், ஜிம், மிகப் பெரிய கார்பார்க்கிங் என அசத்தலான  வசதிகள் கொண்டது.


Leave a reply