சினிமாவிலிருந்து வெப் சீரிஸுக்கு தாவிய நடிகை.. ராதிகா ஆபதே... நித்யா மேனன் பாணிக்கு மாறினார்...

by Chandru, Nov 18, 2019, 10:13 AM IST
Share Tweet Whatsapp

நடிகை ஹன்சிகா தற்போது மகா, பார்ட்னர் படங்களில் நடித்து வருவதுடன் தெலுங்கில் 2 படங்களில் நடிக்கிறார். அவர் நடித்துள்ள தெனாலி ராமகிருஷ்ணா பிஏபிஎல் தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வருகிறது.  

இப்படம் தனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. பட வெற்றிக்காக புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.  

ராதிகா ஆப்தே, சுனைனா, நித்யாமேனன் உள்ளிட்ட பிரபல நடிகைகள் சமீபகாலமாக வெப் சீரிஸில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இதுவரை அந்த பக்கம் தலைவைக்காமலிருந்த ஹன்சிகா தற்போது அவரும் நித்யா, ராதிகா போன்றவர்களின் பாணியில்  வெப்சீரிஸில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அனுஷ்கா நடித்த பாக்மதி படத்தை இயக்கிய ஜி.அசோக் இந்த வெப் சீரிஸை இயக்குகிறார்.

வெப் சீரிஸ் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துவிட்டது. 4 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடக்க வேண்டி உள்ளது.  வெப் சீரிஸில் முதன்முறையாக நடிப்பதால் கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது' என்றார் ஹன்சிகா.


Leave a reply