மீண்டும் ஹரியுடன் இணையும் சூர்யா...வெற்றிமாறனுடனும் கைகோர்க்கிறார்...

by Chandru, Nov 18, 2019, 15:06 PM IST
கே.வி,ஆனந்த் இயக்கிய காப்பான் படம் சூர்யாவுக்கு வெற்றிபடமாக அமைந்தது. அடுத்து சூரரைப்போற்று படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை பெரிய அளவில் சூர்யா எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கனா இப்படத்தை இயக்குகிறார். இதில் அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கிறார்.
பெரிய வெற்றிக்காக அலைமோதிகொண்டிருக்கும் சூர்யா மீண்டும் தனது ஆஸ்தான இயக்குனர் ஹரியுடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் இருவரும் சந்தித்து பேசினர். சிங்கம் 4 பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் அடுத்து சிங்கம் 4 இயக்குவதா அல்லது புது கதையில் இணைவதா என்று ஆலோசித்துள் ளனர்.
சூர்யாவுக்காக சிங்கம் 4 ஸ்கிரிப்ட் ஒன்றும் அது தவிர கிராமத்து பின்னணயில் குடும்ப செண்டிமெண்ட் கதை ஒன்றுமாக இரண்டு ஸ்கிர்ப்ட்டை ஹரி உருவாக்கி வருகிறாராம். இவர்களுடன் இம்முறை டி.இமான் இசையில் இணைய உள்ளாராம். இந்த கூட்டணிக்கு முன்னதாக வெற்றிமாறனுடனும் சூர்யா இணைய பேச்சு நடக்கிறது.

Leave a reply