நடிகை நயன்தாரா, விக்னேஷ்சிவன் ஜோடி கடந்தவரம் அமெரிக்கா சென்றனர்.
அவர்களுக்கு நியூயார்க் நகரில் தயாரிப்பாளர் போனிகபூர் விருந்து தந்தார். பின்னர் விடை பெற்ற நயன் - விக்னேஷ் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்தனர், நயன்தாராவுக்கு இன்று 35வது வயது பிறந்தநாள். அதை இருவரும் அமெரிக்கா விலேயே கொண்டாடுகின்றனர்.
தர்பார் படப்பிடிப்பை முடித்து கொடுத்த பிறகு விடுமுறை எடுத்து வெளிநாடு சென்றிருக்கும் நயன்தாரா அடுத்து விக்னேஷ்சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நடிக்கிறார். இதில் பார்வையற்ற மாற்று திறனாளியாக அவர் வேடம் ஏற்கிறார். இது நயன்தாரா நடிக்கும் 65 வது படமாகும்.