சினிமா தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்... பருத்திவீரன், சிங்கம் தயாரித்தவர்...

by Chandru, Nov 19, 2019, 10:22 AM IST

கார்த்தி நடித்த பருத்திவீரன் தொடங்கி சிங்கம், நான் மகான் அல்ல, சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளவர் கே,ஈ.ஞானவேல்ராஜா இவர் நடிகர் சிவக்குமார், சூர்யா உறவினர்.

வருமானவரி தொடர்பாக விசார ணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறை சார்பில், ஞானவேல்ராஜாவுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராக வில்லை.

இதையடுத்து, சென்னை, எழும்பூர் நீதிமன்றத் தில் ஞானவேல்ராஜா மீது வருமான வரித் துறையினர் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த வழக்கில், ஞானவேல்ராஜாவை நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியும் ஆஜ ராகவில்லை.

அவருக்கு பிடிவாரண்ட் பிறப் பிக்க உத்தரவிடுமாறு, நீதிமன்றத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, ஞானவேல்ராஜாவுக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.


More Cinema News