தமிழக அரசியலில் நாளை அதிசயம் நடக்கும் கமல் விழாவில் ரஜினி பரபரப்புபேச்சு...

by Chandru, Nov 19, 2019, 10:11 AM IST

கமல்ஹாசன் 60 ஆண்டு திரையுலகின் நிறைவு விழா "உங்கள் நான்" என்ற பெயரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. அதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது:

உலகிலேயே 10 வேடம் ஏற்று நடித்த ஒரே நடிகர் யாரும் கிடையாது. அதனால்தான் கமலை உலகநாயகன் என்று அழைக்கிறார்கள். அவர் நடிகர் மட்டுமல்ல பாடகர், எல்லா தொழில் நுட்பமும் தெரிந்த இயக்குனர். அவருக்கும் எனக்கும் உள்ள நட்பு உயிரோட் டம் நிறைந்தது.

இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயமும் அற்புதமும் நிறைந்தவை. அனைத்தும் 2 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் முதல்வர் ஆவேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அவர் முதல்வராக பதவி ஏற்றதும் இப்போது ஆட்சி கவிழ்ந்துவிடும்.. அதிகபட்சம் 4 மாதங்கள் என்று 99 விழுக்காடு அளவிற்கு பேசினார்கள். எல்லா தடைகளையும் மீறி மக்களுக்கான பணியை முனைப்புடன் செய்து வருகிறார்..
இது எல்லாம் அதிசயத்தால்தான் நடக்கிறது. தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் அதிசயம் நடக்கும் .

சினிமாவில் 60 ஆண்டு கலை பயணம் சாதாரண விஷயமல்ல. கமல் செய்த தியாகங்கள் நிறைய. நான் கூட கூலியாக கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் கமல் பட்ட கஷ்டங்களோடு ஒப்பிட்டால் ரொம்ப சாதாரணம். கமலின் குடும்பாம் கவுரமிக்கது ஆனால் அதையெல்லாம் விட்டு சினிமாவில் அவர் சாதித்துள்ளார்.

களத்தூர் கண்ணம்மா படத்தில் கமல்ஹாசன் நடிப்பை பார்த்திருக்கிறேன். நானும் டூரிங் டாக்கீஸில்போய் அந்த படம் பார்த்தேன். அந்த குழந்தையின் படம் பார்த்த இந்த குழந்தையும் வளர்ந்து படத்தில் இணைந்தது அதிசயம். கமல் மகா நடிகன். நடமாடும் பல்கலைக்கழகம்.

எங்களுக்குள் சித்தாந்தம் மாறலாம். நட்பு மாறாது. எங்கள் நட்பை யாராலும் பிரிக்க முடியாது. அவர் நீண்ட நாள் வாழ வேண்டும்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

நிகழ்ச்சியில் இளையராஜா, எஸ்,ஏ,சந்திர சேகர், விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான நடிகர். நடிகைகள் கலந்து கொண்டனர்.


Leave a reply