நடிகை நயன்தாரா படத்தில் இணையும் இந்தி ஹீரோயின்.. முதல் படத்தில் தனுஷுக்கு ஜோடி போட்டவர்...

by Chandru, Nov 19, 2019, 10:01 AM IST
Share Tweet Whatsapp
ரஜினி, விஜய், அஜீத், சிம்பு, விஷால், விஜய் சேதுபதி என்று ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடி போட்டுநடித்து வந்த நயந்தாரா திடீரென்று ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதை களில் நடிக்கத்தொடங்கினார்.  
ஆரம்ப கட்ட படங்கள் சில வெற்றிபெற்றன. அதன்பிறகு எடுபடாமல் போனது. இதையடுத்து மீண்டும் ரஜினி, விஜய், அஜீத் என ஜோடிபோட்டார். அப்படங்கள் வெற்றி பெற்றன.
 
இந்நிலையில் ஒரு கொரியன் படத்தின் ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார் நயன்தாரா.
நெற்றிக்கண் எனப் பெயரிடப் பட்டிருக்கும் இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார்.
 
இந்தியிலும் இப்படம் உருவாகிறது. ஆனால் அதில் நயன்தாரா நடிக்கவில் லையாம், அவரது வேடத்தில்  சோனம் கபூர் நடிக்கிறாராம். இதில் நயந்தாரன் சோனம் இருவருமே பார்வையற்ற மாற்று திறனாளியாக நடிக்கின்றனர்.
 
சோனம் கபூர், தனுஷ் நடித்த முதல் இந்தி படமான ராஞ்சனா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர்.

Leave a reply