விளையாட்டு வீராங்கனையாக நடிக்கும் நடிகை காயம்... படப்பிடிப்பு ரத்து...

Parineeti Chopra injures neck on Saina Nehwal biopic sets

by Chandru, Nov 19, 2019, 22:00 PM IST
சர்வதேச அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பேட்மின்டன் போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்திருப்பவர் சாய்னா நேவால்.
இவரது வாழ்க்கை இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படமாகிறது. சாய்னா வேடத்தில் இந்தி நடிகை பரிணிதி சோப்ரா நடிக்கிறார். இவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை ஆவார்.
பேட்மின்டன் வீராங்கனையாக நடிப்பதற்காக கடந்த 4 மாதமாக பயிற்சி பெற்று வந்தார் பரிணிதி. அதன்பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். மும்பையில் உள்ள ராம்ஷத் தாகூர் சர்வதேச விளையாட்டு வளாகத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
பேட்மின்டன் விளையாடும் காட்சியில் விறுவிறுப்பாக நடித்தார் பரிணிதி சோப்ரா அப்போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதுடன், கழுத்தில் சுளுக்கு பிடித்துக்கொண்டது. வலியால் துடித்த அவருக்கு பிசியோதெரபி டாக்டர் சிகிச்சை அளித்தார். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
வலியிலிருந்து மீண்ட பிறகு மிண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்கிடை யில் ஐதராபாத் சென்று சாய்னாவை நேரில் சந்திக்க உள்ளார் பரிணிதி சோப்ரா.

You'r reading விளையாட்டு வீராங்கனையாக நடிக்கும் நடிகை காயம்... படப்பிடிப்பு ரத்து... Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை