1990களில் ஹீரோக்களுடன மரத்தை சுற்றி லவ் டூயட் பாடிக்கொண்டிருந்தவர் சுமா ரங்கநாத். தற்போது நடிப்பில் அவர் நடத்தியிருக்கும் அதிரடி மாற்றம் திரையுலகினரை மலைக்க வைத்திருக் கிறது.
பெரும்புள்ளி, மாநகர காவல், குறும்புக் காரன், மேட்டுப்பட்டி மிராசு போன்ற பல படங் களில் அப்போது நடித்த சுமா, நீண்ட இடை வெளிக்கு பிறகு அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் நடித்திருந்தார். தற்போது 'தண்டுபாளையம்' என்ற புதிய படத்தில் பிரதான வேடம் ஏற்றிருக்கும் சுமா ரங்கநாத், சுருட்டு பிடித்தடி ரவுசு செய்யும் காட்சிகள் பரபரப்பாகியிருக்கிறது. இப்படத்தை கே.டி.நாயக் இயக்குகிறார்.
1990களில் கர்நாடகா மாநிலம் தண்டுபாளையம் என்ற ஊரில் இருந்த கொள்ளை கூட்டம் கொடூர மான கும்பலமாக மாறியது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற பயங்கர செயல்களில் ஈடுபட்டது. அதை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இதில் கொள்ளை கூட்ட தலைவி யாக சுமா ரங்கநாத் நடிக்கிறார்.
இவருடன் முமைத் கான், பேனர்ஜி, ராக்லைன் சுதாகர், வெங்கட்பலர் நடிக்கின்றனர். ஆர்.கிரி ஒளிப்பதிவு செய்கிறார். ஆனந்த் ராஜா விக்ரம் இசை அமைக்கிறார். வெங்கட் படத்தை தயாரிக்கிறார். வரும் டிசம்பர் மாதம் தமிழ், மலையாளம், இந்தி உள்பட 10 மொழிகளில் படம் வெளியாக உள்ளது.