மிமிக்ரி செய்து இயக்குனரை அசத்திய விஜய்.. தளபதி 64 ஷுட்டிங் பிஸியிலும் கலகலப்பு..

by Chandru, Nov 20, 2019, 19:11 PM IST
Share Tweet Whatsapp
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்.. இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடக்கிறது. லோகேஷ்கனகராஜின் நண்பர் ரத்னகுமார். இவர் அமலாபால் நடித்த ஆடை படத்தை இயக்கியவர்.
ரத்னகுமாருக்கு நேற்று பிறந்தநாள். டெல்லியில் தளபதி 64 படப்பிடிப்பில் இருக்கும் லோகேஷ் கனராஜிடமிருந்து ரத்னகுமாருக்கு செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசியவர் 'மச்சி ஹேப்பி பர்த்டே டா..' என்றார்.
 
பின்னர்தான் தன்னுடன் பேசியது லோகேஷ் கனகராஜ் இல்லை, நடிகர் விஜய்தான் தன் குரலி மிமிக்ரி செய்து லோகேஷ்போல் பேசி வாழ்த்தியி ருக்கிறார் என்பது தெரிந்தது. விஜய் தன்னிடம் பேசி வாழ்த்து கூறியது அறிந்து மகிழ்ச்சி அடைந்த ரத்னகுமார்  தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
 
தளபதி 64 ஷூட்டிங் பிஸியிலும் அவ்வப்போது இதுபோன்று தமாஷ் செய்து படக்குழுவினரை விஜய் உற்சாகப்படுத்துவதால் அதிக வேலை இருந்தாலும் எல்லாம் வேகமாக நடக்கிறதாம்.

Leave a reply