காமெடி நடிகரை வெச்சி செய்த ஹீரோ.. பொண்ணு கிடைச்சிடுச்சா, நீ ரொம்ப லக்கி..

by Chandru, Nov 21, 2019, 18:34 PM IST

விஜய், அஜீத், ஜீவா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நண்பன் கதாபாத்தில் நடித்திருப்பதுடன் காமெடி நடிகராகவும் வலம் வருபவர் சதீஷ்.

சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அவரை ஹிரோக்கள் கலாய்ப்பது வழக்கம். தனக்கு திருமணம் நடக்கவில்லையே என்று பலமுறை தன் ஏக்கத்தை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் சதீஷ். இதனால் உடன் நடித்த சமந்தா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்களிடம் ஐ லவ் யூ சொல்லி மூக்குடைபட்டிருக்கிறார். ஆனாலும் அதற்காக அவர் சளைத்துவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் அவருக்கு குடும்பதார் பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். இதுபற்றிய அறிவிப்பை மகிழ்ச்சியாக சதீஷ் கடந்த மாதம் வெளியிட்டிருந்தார். தற்போது திருமண பத்திரிகையை ஹீரோ, ஹீரோயின்களை சந்தித்து நேரில் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார். கொரில்லா படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்தபோது அவரது நெருங்கிய நண்பராகிவிட்டார் சதீஷ். அவருக்கு திருமண பத்திரிகை அளித்தார்.

அதை பெற்றுக்கொண்டு ஓரு வீடியோ வெளியிட்ட ஜீவா, 'சும்மாவே சினிமாகாரனுக்கு பொண்ணு தரமாட்டாங்க. அந்த விதத்துல நீங்க லக்கி ப்ரோ... விரைவில் திருமண வாழ்க்கையில் இணையவிருக்கும் உங்களுக்கும் சிந்துவுக்கும் வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக பெண் கிடைக்காமலிருந்த சதீஷிக்கு பெண் கிடைத்து திருமணம் நடப்பதை தனது பாணியில் கலாய்த்திருந்தார் ஜீவா. அதை சதீஷ் ஜோவியலாக எடுத்துக் கொண்டு சிரித்து மகிழ்ந்தார்.


More Cinema News