கமலுக்கு நாளை அறுவை சிகிச்சை, சில வாரம் ரெஸ்ட்...காலில் பொருத்திய ஸ்டீல் பிளேட் நீக்கம்...

by Chandru, Nov 21, 2019, 18:40 PM IST
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் சபாஷ் நாயுடு. இதில் முதன்முறையாக ஸ்ருதி ஹாசனும் நடிக்கவிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்தது.
பின்னர் சென்னையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டது. அதுபற்றி தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்திவிட்டு மாடிப்படியிலிருந்து இறங்கி வரும்போது கால் தடுக்கி படியில் உருண்டு விழுந்தார் கமல்.
எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் கமலின் வலது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் ஸ்டீல் பிளேட் பொருத்தப்பட்டது. அதன் பிறகு 4 மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருந்தார். இந்த விபத்துக்கு பிறகு சபாஷ் நாயுடு பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய கமல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். தற்போது இந்தியன் 2ம் பாகத்தில் நடிக்கிறார். தொடர்ச்சியாக பணி களில் ஈடுபட்டு வந்ததால் காலில் பொருத்தப் பட்டிருந்த ஸ்டீல் பிளேட்டை அகற்றுவதற் கான அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டு வந்தார்.
தற்போது டாக்டர்களின் அறிவுறுத்தல் படி அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்திருக் கிறார் கமல். நாளை மருத்துவமனையில் அனுமதியாகும் கமலுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து ஏற்கனவே பொருத்திய ஸ்டீல் பிளோட்டை அகற்று கின்றனர். அதன்பிறகு சில வாரங்கள் ஓய்வில் இருக்க முடிவு செய்திருக்கிறார்.
கமலின் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை மற்றும் ஓய்வு குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2ம் பாகத்தில் நடிக்கிறார். காலில் அறுவை சிகிச்சை நடப்பதால் அப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டார். மற்ற நடிகர்களின் காட்சிகள் படமாகவுள்ளன.

Leave a reply