தெலுங்கு திரையுலகம் இன்னொரு வீடு... ஸ்ருதி ஹாசன் உருக்கம்..

by Chandru, Nov 22, 2019, 18:48 PM IST
Share Tweet Whatsapp
சூர்யாவுடன் எஸ் 3 (சிங்கம் 3) படத்தில் நடித்த பிறகு  கடந்த 2 வருடமாக புதிய படங்களில் நடிக்காமலிருந்தார் ஸ்ருதி ஹாசன் . தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் லாபம்  படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார்.
அதேபோல் தெலுங்கிலும் புதிய படத்தில் ரவி தேஜா ஜோடியாக நடிப்பதன் மூலம் டோலிவுட்டிலும் மறுபிரவேசம் செய்கிறார், சமீபத்தில் தெலுங்கு பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்ருதி, தெலுங்கில் தனது ரீஎன்ட்ரி பற்றி கூறினார். அவர் கூறும்போது, 'தெலுங்கு படங்களில் நடிப்பது எனக்கு பிடித்தமானது மட்டுமல்ல மகிழ்ச்சி தருவதும் ஆகும்.
 
அதற்கு காரணம் எனது சினிமா வெற்றி இங்கிருந்துதான் தொடங்கியது.  நான் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், தெலுங்கு திரைப்பட ரசிகர் கள் என் மீது அன்பு காட்டுகிறார்கள். நல்ல வகையில் ஆதரவும் கொடுத்துள்ளார்கள். தெலுங்கும் எனக்கு ஒரு வீடு போன்றது தான். மீண்டும் தெலுங்கில் ரீஎன்ட்ரி ஆவது சந்தோஷமாக இருக்கிறது' என்றார்.

Leave a reply