சினிமா குரு தத் மணிரத்னம்.. இயக்குனரை வர்ணித்த நடிகர்..

by Chandru, Nov 28, 2019, 18:28 PM IST
மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் படப்பிடிப்புக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு பெரும்பகுதி முடிந்துவிட்டது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதில் ராஜா வேடம் ஏற்கிறார் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன்.
இதற்கிடையில் பார்த்திபன், மணிரத்னத்தை சினிமா குரு என்று வர்ணித்திருக்கிறார். பார்த்திபன் ஒரே ஆளாக எழுதி இயக்கி நடித்தபடம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தை சமீபத்தில் பார்த்த மணிரத்னம் நடிகர் பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
'ஒத்த செருப்பு படத்தை பார்த்தேன் மிகவும் நேசித்தேன்' என மணிரத்னம் குறிப்பிட்டிருந்தார். அதை குறிப்பிட்டு, 'என் சினிமா 'குரு'தத் மணிரத் அவர்களிடமிருந்து ஒத்த செருப்புக்கான பாராட்டு..' என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தி யிருக்கிறார் பார்த்திபன்.
சீக்கிரமே மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில் இணைய உள்ளார் சரித்திர பெயர் கொண்ட பார்த்திபன்.


More Cinema News