அன்னக்கிளி படம் மூலம் தமிழ் திரையுலகில் புயலாக நுழைந்தவர் இசை அமைப்பாளர் இளையராஜா. கடந்த 40 ஆண்டு களுக்கும் மேலாக அந்தபுயல் தென்றலாக மாறி தமிழ் இசைபிரியர்களுக்கு தாலாட்டு பாடி வருகிறது.
சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தனது இசை பணியை ஆண்டாண்டு காலமாக செய்து வருகிறார் இளையராஜா. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பிரசாத் ஸ்டுடி யோவிலிருந்து வெளியேறுமாறு அதன் நிர்வாகம் இளையராஜாவுக்கு பிரஷர் கொடுத்து வருகிறது . அதற்கு இளைய ராஜா மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள இளையராஜா இசை கம்போஸ் செய்யும் இசைக்கூடம் இடிக்கப்பட்டதாக தகவல் பரவியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரைப்பட இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் பிரசாத் ஸ்டுடியோ முன் நேற்று திரண்டனர். இதனால் கேட் இழுத்துமூடப்பட்டது. உள்ளே செல்ல முற்பட்டபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா, கே.பாக்யராஜ், அமீர், சீமான், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துடன் பேச்சுவார்த் தை நடத்தினர். இளையராஜாவிடம் பிரசாத் ஸ்டுடியோ போட்டிருந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக நிர்வாக தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து பாரதிராஜா நிருபர்களிடம் கூறும்போது,' இளையராஜாவுக்காக இசை கூடம் விரைவில் உருவாகும்' என்றார்.