பெண் இயக்குனரை மணக்கும் அதர்வா தம்பி... விஜய்யின் அத்தை மகளுக்கு காதல் திருமணம்...

by Chandru, Nov 29, 2019, 19:44 PM IST
Share Tweet Whatsapp

கே.பாலசந்தரால் பூவிலங்கு படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் முரளி. அன்று தொடங்கிய அவரது பயணம் ஏற்ற இறக்கங் களுடன் பல வருடங்கள் நீடித்தது. இதயம் படத்தில் நடித்தபோது அவரது நடிப்புக்கு பெரிய புகழ் கிடைத்தது. கடைசியாக அதர்வா ஹீரோவாக நடித்த பாணா காத்தாடி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அவரது மரணத் துக்கு பிறகு நடிகர் அதர்வா தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

முரளிக்கு ஆகாஷ் என்ற இன்னொரு மகன் இருக்கிறார். ரெஸ்ட்டாரெண்ட் நடத்தி வருகிறார். சிங்கப்பூரில் ஆகாஷ் படித்தபோது அவருடன் சினேகா பிரிட்டோ படித்தார். இவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் தங்கை விமலா மகள். அதாவது நடிகர் விஜய்யின் அத்தை மகள். சினேகா பிரிட்டோவுக்கும் ஆகாஷுக்கும் காதல் மலர்ந்தது. இதற்கு சினேகா குடும்பத்தில் எதிர்ப்பு எழுந்தது.

இருவரும் வேறுவேறு மதம் என்பதால் ஏற்பட்ட பிரச்னை தற்போது சுமூக தீர்வுக்கு வந்திருக்கிறது. ஆகாஷ் சினேகா திருமணத்துக்கு இருவீட்டாரும் பச்சை கொடி காட்டி உள்ளனர். வரும் டிசம்பர் 6ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது.
கூடுதல் விஷயம் என்னவென்றால் சினேகா வும் ஒரு இயக்குனர் ஆவார். சட்டம் ஒரு இருட்டறை படத்தின் 2ம் பாகத்தை இயக்கியவர் இவர்தான்.


Leave a reply