நடிகையிடம் செல்பி எடுக்கும் சாக்கில் சில்மிஷம்.. ரசிகர் அத்துமீறலால் பரபரப்பு..

by Chandru, Dec 2, 2019, 17:43 PM IST

பாலிவுட் நடிகர் சயீப் அலி கானின் மகள் சாரா அலிகான். சமீபத்தில் அமெரிக்கா சென்றவர் மும்பை திரும்பினார். அவரக் கண்டதும் அங்கிருந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுப்பதற்காக அவரை நோக்கி ஒடிவந்தனர். அவரும் சிரித்த முகத்துடன் போஸ் தந்தார்.

குறைந்த அளவே ரசிகர் இருந்ததால் பொறுமை யாக போஸ்தந்தார் சாரா. ஒரு ரசிகர் அவரை மிகவும் நெருங்கி நின்றதுடன் திடீரென்று அவரது இடுப்பில் கைப்போட்டார். இதில் ஷாக் ஆன சாரா அவரைவிட்டு விலகினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் அவருக்கும் செல்பிக்கு போஸ் தந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.


More Cinema News