ஹீரோவிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல்.. ஹீரோயின் கைது..

by Chandru, Dec 2, 2019, 17:36 PM IST
மீடூ புகார்கள் புகாரோடு நிற்காமல் பணம் பறிக்கும் விஷயமாக மாறியிருக்கிறது. மராட்டிய நடிகை சாரா ஸ்ரவான். புதிய படமொன்றில் சுபா‌‌ஷ் யாதவுடன் என்ற நடிகருக்கு ஜோடியாக நடித்தார். சில காட்சிகளில் நெருக்காமாக நடிக்கவேண்டியிருந்தது. எந்த பிரச்னையும் இல்லாமல் ஹூட்டிங் முடிந்தது. பிறகுதான் பிரச்னை ஆரம்பமானது.
திடீரென்று சுபாஷ் மீது சாரா ஸ்ரவான் பாலியல் குற்றச்சாட்டு கூறியதுடன் புகாரும் அளித்தார். இதனால் பயந்துபோன நடிகர தன் செயலுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்டார். பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் அனுப்பினார். பிரச்னை அத்துடன் முடிந்தது என்று நினைத்த ஹீரோவுக்கு அதன் பிறகுதான் அதன் தீவிரம் தெரிந்தது.
நடிகர் அனுப்பிய வீடியோவை வைத்து பணம் கேட்டு மிரட்டத் தொடங்கினார் சாரா. ரூ 15 லட்சம் தரா விட்டால் வீடியோவை நெட்டில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். இதனால் அப்செட் ஆனவர் நடிகை மீது போலீசில் புகார் செய்தார். விஷயம் வேறுவிதமாக சென்ற வுடன் சாரா ஸ்வரான் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றார்.
பின்னர் முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சாரா ஸ்வரானை போலீஸார் கைது செய்தனர்.


More Cinema News