ரகுல் பிரீத் ஐதராபாத் வீட்டை விற்றாரா? நடிகை விளக்கம்..

by Chandru, Dec 2, 2019, 17:25 PM IST
கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ரகுல் ப்ரீத். தெலுங்கில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததையடுத்து ஐதராபத்தில் வீடு வாங்கி குடியிருந்தார்.
சமீபகாலமாக அவருக்கு தெலுங்கு படங்களில் வாய்ப்பு குறைந்ததையடுத்து தனது வீட்டை விற்றுவிட்டு பெங்களூரில் வீடு வாங்கி சென்றுவிட்டதாக தகவல் வெளியானது. அந்த தகவலை அறிந்த ரகுல் கோபம் அடைந்தார். இதுபற்றி அவர் விளக்கம் அளித்துள்ளார்.

”எங்கிருந்துதான் இதுபோன்ற செய்திகள் கிடைக்கிறது என்று தெரியவில்லை. அதிகராப் பூர்வமற்றவர்கள் எதையாவது கூறினால் அதை அப்படியே எழுதுகிறார்கள். ஐதராபாத்தில் வீடுவாங்கியபோது அது எனக்கு கிடைத்த பரிசாக எண்ணினேன். தற்போது அதை விற்றுவிட்டதாக கூறுவது வெறும் வதந்திதான். இதுபோன்ற வதந்திகளை நிறுத்துங்கள் நான் உண்மையான தகவலை தருகிறேன்: என்றார் ரகுல் ப்ரீத்.

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை