லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி' படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடித்தவர் அர்ஜூன் தாஸ். இந்நிலையில் 'தளபதி64' படத்தில் விஜய்க்கு வில்லானாக நடிக்க எதிர்பாராத வாய்ப்பாக அழைப்பு வந்தது. ஏற்கெனவே நடிப்பதாக இருந்த வில்லன் நடிகர் ஆண்டனி வர்கிஸ் விலகியதால் அந்த வாய்ப்பு அர்ஜூன்தாஸுகு சென்றது.
விஜய்யுடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு பற்றி அர்ஜூன்தாஸ் டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது, 'தளபதி 64 படத்தில் நான் நடிக்கிறேன் என்ற தகவல் வெளியானது முதலே இன்ப அதிர்ச்சியில் பேச முடியாத அளவுக்கு உள்ளேன். இந்த வாய்ய்பு உங்கள் அனைவரின் இதயபூர்வ வாழ்த்தால் கிடைத்தது என்றே நம்புகிறேன். ஒட்டுமொத்த பிரபஞ்ச சக்தியும் இணைந்து இதனை நடத்தியிருக்கிறது. விஜய்யுடனும் விஜய் சேதுபதியுடனும் நடிக்க உள்ளேன்.
புது நடிகரான எனக்கு இது மிகப்பெரிய ஆசை. இது எனக்கு தரப்பட்டிருக்கும் பெரிய ஊக்கம். 'கைதி' வெளியானது முதல் எனக்கு கிடைத்து வரும் ஆதரவு அலப்பரியது. அந்த ஆதரவுக்கு எனது அன்பை வெளிப்படுத்த இந்த சந்தர்பத்தை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.