மிதாலிராஜ் வாழ்க்கை படத்தில் டாப்ஸி.. டோனி, சச்சின் படத்தை தொடர்ந்து உருவாகும் பயோபிக்..

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் டோனி, சச்சின் டென்டுல்கர் வாழ்க்கை திரைப்படமானது. அதேபோல் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம், வாழ்க்கையும் படமானது.
தற்போது பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை படம் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிராஜ் வாழ்க்கையும் திரைப்படமாகிறது. இதில் மிதாலியாக டாப்ஸி நடிக்கிறார்.  
 
இப்படத் துக்கு சபாஷ் மிது என பெயரிடப்பட்டிருக் கிறது. சமீபத்தில்தான் குறிபார்த்து துப்பாக்கி யால் சுடும் வயதான பெண் பிரகாஷி டோமர் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்திருந்தார். இது பிரகாஷி டோனரின் வாழ்க்கை  கதையாக உருவானது.  அதைத் தொடர்ந்த டாப்ஸி, மிதாலி வேடம் ஏற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
மிதாலிராஜ்  ஒரு தமிழச்சி.  தற்போது ஜோத்புரில் வசித்து வருகிறார். சர்வதேச, இந்திய அணிகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டிகளில் மிதாலி பங்கேற்று விளையாடி பல்வேறு சாதனைகள்  நிகழ்த்தி உள்ளார்.
 
மிதாலிராஜ் வாழ்க்கை சரித்தித்தில் நடிப்பதுபற்றி டாப்ஸி கூறும்போது, மிதாலி வாழ்க்கை கதையில் நடிக்க  கிடைத்த வாய்ப்பை மிகவும் பெருமையாக கருதுகி றேன். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிதாலியின் பங்களிப்பு மிக முக்கியம் வாய்ந்தது.  அவரது வேடம் ஏற்று கிரிக்கெட் விளையாடி நடிக்கப்போகும் நாளை மிகவும்   ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறேன்' என்றார்.
 
ஏற்கனவே வித்யா பாலன் நடித்த கஹானி, கங்கனா ரனவத் நடித்த குயின்,  பிரியங்கா சோப்ரா நடித்த மேரி கோம், தீபிகா படுகோன் நடித்த பத்மாவத் படங்களை  தயாரித்த வயாகாம்18 ஸ்டூடியோ மிதாலிராஜ் வாழ்க்கை சரித்திர படத்தையும் தயாரிக்கிறது.
Advertisement
More Cinema News
aishwarya-lekshmi-learns-to-drive-a-boat-for-mani-ratnams
படகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..
kamalhaasans-papanasam-to-be-remade-in-chinese
சீன மொழியில்  ரீமேக் ஆன கமல் திரைப்படம்.. எந்த படம் தெரியுமா?
vijay-sethupathis-story-on-farmers
கடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..
archana-kalpathis-announcement-on-50th-day-of-bigil
பிகில் 50வது நாளில் தயாரிப்பாளர்-ரசிகர்கள் கொண்டாட்டம்.. சாதனை வசூல்..
kajal-aggarwal-to-marry-a-businessman-soon
காஜல் அகர்வால் விரைவில் திருமணம்.. இளம் தொழில் அதிபருடன் காதல்..
did-raghava-lawrence-refuse-to-work-with-kamal-haasan
கமல் படத்தில் நடிக்க மறுத்த லாரன்ஸ்.. மீண்டும் சர்ச்சை பேச்சு..
actress-indhuja-enjoys-rajini-film-baasha
முக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..
thalapathy-64-song-update-anirudh-reply-to-his-fan
தளபதி 64 பாடல்: அனிருத் அப்டேட்.. பரவசமாகிப்போனேன்..
akshay-kumar-gifts-onion-earrings-to-twinkle-khanna
ரஜினி பட வில்லன் வாங்கி வந்த வெங்காய ஜிமிக்கி .. மனைவியிடம் அரட்டை கச்சேரி..
gautham-menon-talks-about-the-success-of-yennai-arindhaal
அஜீத் படம் பற்றி கவுதம் மேனன் முரண்
Tag Clouds