தமிழ் பட ஹீரோயினை மணந்தார் கிரிக்கெட் வீரர்.. மும்மைபயில் தடபுடலாக நடந்த திருமணம்..

by Chandru, Dec 3, 2019, 17:06 PM IST

சித்தார்த் கதாநாயகனாக நடித்த என் எச் 4 படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அர்ஷிதா ஷெட்டி. இதுதவிர, ஒரு கன்னியும் மூன்று களவானிகளும், இந்திரஜித் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இவருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் மணிஷ் பாண்டேவுக்கும் காதல் மலர்ந்தது. அந்த காதலுக்கு குடும்பத்தினர் பச்சை கொடி காட்டினர். இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து நேற்று அர்ஷிதா, மணிஷ் திருமணம் வைதீக முறைப்படி மும்பையில் நடந்தது. அர்ஷிதா கழுத்தில் மணிஷ் தாலி கட்டினார்.

மாபிள்ளை மணிஷ் தலைபாகை அணிந்து ஷர்வாணி உடையில் மாப்பிள்ளை கோலத்தில் இருந்தார். அர்ஷிதா ஆரஞ்ச் நிறத்தில் ஜரிகை பார்டர் வேய்ந்த பட்டு சேலை அணிந்திருந்தார்.

திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்கள், சில கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டனர். மற்றடி ஐபிஎல் அணியினர் தனித்தனியாக தங்களது வாழ்த்துக்களை டிவிட்டர் மூலம் மணமக்களுக்கு தெரிவித்திருந்தனர். பின்னர் அறுசுவையுடன் விருந்து பரிமாறப்பட்டது.


More Cinema News

அதிகம் படித்தவை