பொன்னியின் செல்வனில் சண்டகோழி வில்லன்.. குதிரை ஏற்றம், வாள் பயிற்சி பெறுகிறார்..

by Chandru, Dec 3, 2019, 17:19 PM IST
Share Tweet Whatsapp
சண்டக்கோழி படத்தில் காசி என்ற ரவுடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் லால். இவர் ஏற்கனவே பல்வேறு படங்களில் குணசித்ரம், வில்லன் கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறார்.
தற்போது மணிரத்னம் இயக்கும் கல்கியின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு பெற்றிருக்கிறார். இதற்காக அவர் குதிரை ஏற்று பயிற்சியும், வாள் சண்டை பயிற்சியும் பெறுகிறார்.
பொன்னியின் செல்வன் சரித்திர படத்தில் நடிப்பதற்காக ஏற்கனவே அமிதாப்பச்சன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விஜய்சேதுபதி, நயன்தாரா, ஐஸ்வர்யாராய், கீர்த்தி சுரேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே தயாராகி வருகிறார்கள்.

Leave a reply