மீண்டும் அமெரிக்கா பறந்தார்  அனுஷ்கா .. மறுபடியும் எடை குறைப்பு சிகிச்சை..

by Chandru, Dec 4, 2019, 20:06 PM IST
Share Tweet Whatsapp
கடந்த 2 வருடமாகவே நடிகை அனுஷ்காவுக்கு உடல் எடை அதிகரித்தது பெரும் பிரச்னையாக இருக்கிறது.  இதனால் புதிய படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கியிருந்தார். அவருக்கு வருவதாக இருந்த வாய்ப்புகளும் வேறு ஹீரோயினுக்கு சென்றது.
உடலில் கூடிய எடையை குறைத்து ஒல்லியாவதற்காக உணவு கட்டுப்பாடு ஜிம்மில் பயிற்சி மேற் கொண்டதுடன்  கடந்த ஆண்டு அமெரிக்கா சென்று மருத்துவ சிகிச்சை மூலம் எடை குறைக்க முயன்றனர். அதெல்லாமே விழலுக்கு இறைத்த நீராக வீணாப்போனது. ஒரு சுற்றுமட்டுமே இளைத்ததுபோல் தோன்றினார்.
 
ஆனாலும் அனுஷ்கா வெயிட் குறைந்ததுபோல தெரிய வில்லை என ரசிகர்கள்  கமென்ட் போட்டனர்.  ஆனாலும் நிசப்தம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி நடித்து வந்தார். தற்போது ஷூட்டிங்கிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு மீண்டும் அமெரிக்கா பறந்துவிட்டார். அங்கு ஒரு மாதம் தங்கி உடல் எடை குறைப்பதற்கு சிகிச்சை மேற்கொண்டு திரும்ப உள்ளார்.
 
இம்முறை அனுஷ்கா உடல் எடையை குறைப் பதில் அதிக அக்கறை காட்டுவதால் அதன்படியே எடையையும் குறைத்துக்கொண்டு திரும்பவார் என்று அனுஷ்காவின் ரசிகர் வட்டாரஙகள்  தெரிவிக்கின்றன.

Leave a reply