விஜய்யின் தளபதி 64 படத்துக்கு சம்பவம் டைட்டிலா? ஸ்ரீகாந்த் பட இயக்குனர் அதிர்ச்சி.

by Chandru, Dec 4, 2019, 19:23 PM IST
Share Tweet Whatsapp
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்துக்கு சம்பவம் என டைட்டில் வைக்கப்படவிருப்பதாக நெட்டில் தகவல் பரவியது. தளபதி ரசிகர்கள் சம்பவம் என்ற டைட்டிலுடன் விஜய் படத்தையும் வைத்து டிசைன் செய்து இணைய தளத்தில் பரபரப்பாக வெளி யிட்டு வருகின்றனர். ஆனால் இந்த டை்டிலை தளபதி 64 பட தரப்பினர் இதுவரை உறுதி செய்யவில்லை.
 
இந்நிலையில் ஷாலோம் ஸ்டூடியோஸின் ஜான் மேக்ஸ், 'சம்பவம்' என்ற பெயரில் படம் தயாரித்து வருவது தெரியவந் துள்ளது. மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு போன்ற படங்களை இப்பட நிறுவனம் ஏற்கனவே தயாரித்திருக்கிறது. சம்பவம் படத்தில் ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் நடித்து வருகின்றனர். ரஞ்சித் பாரிஜாதம் இயக்குகிறார். கதாநாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர்.
 
விஜய் படத்திற்கு சம்பவம் என டைட்டில் வைக்கவிருப்பதாக வந்த தகவலை கண்ட இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் கூறும்போது, 'சம்பவம் என்ற படத்தை இயக்கி வருகிறேன். முறைப்படி இந்த தலைப்பு பதிவு செய்யப்பட்டி ருக்கிறது. விஜய் நடிக்கும் படத்திற்கு சம்பவம் என்று டைட்டில் வைத்திருப்பதாக வரும் தகவல்கள் எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சி தந்துள்ளது' என்றார்.

Leave a reply