மீண்டும் டிவி சீரியலில் கமல், அஜீத் நடிகை.. சினிமாவில் நடிக்காதது ஏன்?

by Chandru, Dec 4, 2019, 19:15 PM IST

கமலுடன் பஞ்ச தந்திரம், தெனாலி, விஜய், சூர்யாவுடன் பிரண்ட்ஸ், அஜித்துடன் காதல் கோட்டை, தொடரும், விக்ரமுடன் விண்ணுக்கும் மண்ணுக்கும் என ஸ்டார் நடிகர்களுடன் நடித்து வந்தார் தேவயானி. முன்னணி நடிகை வரிசையில் டாப் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென்று இயக்குனர் ராஜகுமாரை திருமணம் செய்துகொண்டு நடிப்பிலிருந்து விலகினார்.

மார்க்கெட் உச்சத்துக்கு சென்றுக்கொண்டிருந்த போது திடீரென்று அவர் நடிப்பிலிருந்து விலகிய தால் அவரது பட வாய்ப்புகளும் நின்றுபோனது. அதன்பிறகு அம்மா வேடங்களில் நடிக்கவே வாய்ப்பு வந்தது. பிடித்த வேடங்களை ஏற்றார். ஒரு கட்டத்தில் டிவி சீரியல்களில் நடிக்கத் தொடங்கி னார். கோலங்கள், மஞ்சள் மகிமை, கொடி முல்லை, போன்ற தொடர்களில் நடித்தவர் கடந்த ஆண்டு சீரியலிலும் நடிக்காமலிருந்தார்.

தற்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர்வதுபோல் டிவி சிரியலில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராசாத்தி என்ற சீரியலில் சவுந்தரவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தேவயானி. அதற்கான புரமோஷனில் தேவயானியே தோன்றி சீரியல் பற்றி கதைச் சுருக்கம் சொல்கிறார். கதாநாயகி ராசாத்தியை வில்லி சிந்தாமணியிடம் இருந்து காப்பாற்றும் பாத்திரத்தில் நடிப்பதாக தேவயானி கூறுகிறார். சீரியலில் நடிக்கும் தேவயானி சினிமாவில் நடிக்க மறுப்பது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


More Cinema News

அதிகம் படித்தவை