அர்த்தமில்லாமல் நிர்வாண காட்சியா? நடிக்க மறுக்கும் ராதிகா ஆப்தே..

by Chandru, Dec 4, 2019, 20:22 PM IST
Share Tweet Whatsapp

நடிகை ராதிகா ஆப்தேவை தமிழ் ரசிகர்கள் குடும்பபாங்கான பெண்ணாகவே அறிந்து வைத்திருக்கின்றனர். ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்ததுடன் வயதான தோற்றதிலும் நடித்திருந் தார். முன்னதாக கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் டோனி உள்ளிட்ட மேலும் சில படங் களில் நடித்திருக்கிறார். எல்லாமே அவரை குடும்பபாங்கான கதாநாயகியாகவே சித்தரித்திருந்தது.

ஆனால் அவர் நடிக்கும் ஒரு சில இந்தி, ஆங்கில படங்கள், வெப் சீரிஸிகளில் படு கவர்ச்சியாக, நிர்வாணமாக, டாப் லெஸ் ஆக நடிப்பதுடன் படுக்கை அறை காட்சியிலும் நடித்து பரப்பை ஏற்படுத்தி தன்னை ஒரு கவர்ச்சி நடிகையாக சித்தரிக்கிறார் ராதிகா ஆப்தே.  அவர் நடித்த பதல்புர், அஹல்யா, லஸ்ட் ஸ்டோரிஸ், வெட்டிங் கெஸ்ட் போன்றவற்றில் இதுபோன்ற ஆபாசங் களை கட்டவிழ்திருந்தார்.

அந்த படங்களை பார்த்த இயக்குனர்கள் சிலர்  விபசாரி வேடத்தில் நடிக்க வேண்டும். கற்பழிக்கப்பட்ட பெண் வேடத்தில் நடித்து கிளைமாக்ஸில் வில்லன்களை பழிக்குபழி வாங்குவதுபோல் நடிக்க வேண்டும் என்று எந்த லாஜிக்குமே இல்லாமல் கதை சொல்லி கால்ஷீட் கேட்கிறார்களாம். அதுபோன்ற கதைகளை ஏற்காமல்  மறுத்துவிடுகிறார் ராதிகா ஆப்தே.

'வெட்டிங் கெஸ்ட் படத்தில் பெட்ரூம் சீனில் நடித்ததை பார்த்து சிலர் விபசாரி வேடத்தில் நடிக்கவும், கற்பழிக்கப்பட்ட பெண்ணாகவும் நடிக்க கேட்கிறார்கள். அதுபோன்ற ஸ்கிரிப்ட்டில் கதாபாத்திரத்துக்கான எந்தவொரு நியாயமும் சொல்லப்படவில்லை. அதுபோன்ற ஸ்கிரிப்ட்டில் எப்படி நடிக்க முடியும் அதான் மறுத்துவிட்டேன். சர்வதேச அளவிலான ரசிகர்களுக்காக உருவாக்கப் பட்ட வெட்டிங் கெஸ்ட் படத்தில் பெட்ரூம் சீன் இடம்பெற்றது. அதற்கான விளக்கமும் அப்படத்தின் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த படத்தில் அதுமட்டுமே முக்கியமான காட்சி இல்லை. அதையும் மீறி நல்ல கதை சொல்லப்பட்டிருக்கிறது' என்றார்.


Leave a reply