வெங்கட்பிரபு இயக்கத்தில் லாரன்ஸ்..  சிம்பு படம் என்ன ஆச்சு?

by Chandru, Dec 5, 2019, 17:41 PM IST
Share Tweet Whatsapp
சென்னை 28, பிரியாணி, சரோஜா, கோவா போன்ற படங்களை இயக்கி குறுகிய காலத்தில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. கடந்த 2 வருடமாக அவரது மார்க்கெட்டல்லடித்துக் கொண்டிருக்கிறது. சூர்யாவை வைத்து இயக்கிய மாசு படம் தோல்வி அடைந்ததால் அதன் பாதிப்பு வெங்கட் பிரபுவை பின்தொடர்ந்த வண்ணமிருக்கிறது. பார்ட்டி என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. 
இதையடுத்து கடந்த வருடம் சிம்பு நடிக்கும் மாநாடு படம் இயக்க உள்ளதாக அறிவித்தார். அப்படம் பிரச்னைகளால் கைவிடப்பட்டது. சிம்புவுக்கும் பட தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் வரை புகார் சென்றது. இதையடுத்து மீண்டும் மாநாடு படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப் பட்டது. ஆனால் ஷூட்டிங் தொடங்கிய தாக தெரியவில்லை
 
இந்நிலையில் நடிகர் லாரன்ஸை சந்தித்திருக்கிறார் வெங்கட்பிரபு. இதனால் லாரன்ஸ் படத்தை  இயக்கப்போகிறார் என்ற பேச்சு எழுந்துள்ளது. ஆனால் இதுகுறித்து உறுதி செய்யாத வெங்கட் பிரபு, நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே நடக்கும் அதனால் இது நடந்திருக்கிறது.
 
நன்றி என குறிப்பிட்டு மெசேஜ் வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த தெளிவில்லாத மெசேஜால் லாரன்ஸ் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்கலாம் என்ற சந்தேகத்துடன் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a reply