சாமியார் நித்தியானந்தா தனிநாடு பற்றி காமெடி நடிகர் நக்கல்.. கிரிக்கெட் வீரருக்கு ருசிகர பதில்..

by Chandru, Dec 5, 2019, 18:01 PM IST
Share Tweet Whatsapp
பெண் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சாமியார் நித்தியானந்தா தென் அமெரிக்காவின் ஈகுவடார் பகுதியில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு 'கைலாஸா' என பெயரிட்டு தனி இந்து நாடு போல் நடத்த உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
இதற்கு , தனி பாஸ்போர்ட், தனிக் கொடி போன்றவற்றை தென் அமெரிக்க நாட்டின் சட்ட உதவியுடன் அமல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து சட்டவல்லுனர்கள் பல்வேறு கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் இதுகுறித்து டிவிட்டரில் 'நித்யானந்தா வின் கைலாஸா தீவிற்கு எப்படி செல்வது, அதற்கு தனியாக விசா எடுக்கவேண்டுமா' என்று கேள்வி எழுப்பி உள்ளார். அந்த கேள்விக்கு காமெடி நடிகர் சதீஷ் அளித்துள்ள பதிலில், 'சொல்கிறேன் பக்தா' என நக்கலாக நித்திபாணியில் பதில் சொல்லியிருப்பதுடன் தமிழ்ப்படம் 2-ம் பாகத்தில் தான் அணிந்திருந்த சாமியார் கெட்டப் போட்டோவையும் வெளியிட்டிருக்கிறார்.

Leave a reply