தனுஷ், அனிருத்பற்றி கொளுத்திபோட்ட பாடகி... இனிமேல் சமைத்து காட்ட முடிவு..

by Chandru, Dec 5, 2019, 18:14 PM IST
Share Tweet Whatsapp

ஜே ஜே படத்தில், மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே, வல்லவன் படத்தில் யம்மாடி ஆத்தாடி, காளை படத்தில் குட்டி பிசாசே, அவன் இவன் படத்தில் டிய்யா டிய்யா டேலு, போக்கிரி படத்தில் டோலு டோலுதான் அடிக்கிறான் போன்ற பல்வேறு பிரபல பாடல்களை பாடியவர் சுசித்ரா. இவருக்கு என்ன ஆச்சோ தெரிய வில்லை த கடந்த 2017ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற டிவிட்டர்  பக்கத்தில்  சர்ச்சைக்குரிய படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதில் நடிகர், நடிகை களின் நெருக்கமான படங்கள் இடம் பெற்றிருந்தது. நடிகர் தனுஷ், இசை அமைப்பாளர் அனிருத், நடிகைகள் திரிஷா, ஆண்ட்ரியா போன்றவர்கள் புகைப்படங்கள் இதில் அடிபட்டன.  இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தனது டிவிட்டர் கணக்கை ஹேக் செய்து யாரோ தன் பெயரில் படங்கள் வெளியிடுவதாக கூறினார்.

சமீபத்தில் சுசித்ராவை காணவில்லை என்று போலீசில் புகார் தரப்பட்டது. பின்னர் அவர் ஒரு ஓட்டலில் தங்கியிருந் தது தெரியவந்தது. இந்நிலையில் சுசிகுக்ஸ் என்ற பெயரில் யூ டியூப் சேனல் தொடங்கி அதில் பிரஞ்சு உணவு வகைகள் செய்து காட்ட உள்ளதாக தெரிவித்திருக்கி றார். இதற்காக லண்டனில் பயிற்சி வகுப்பில் சேர்ந்து இதனை கற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.


Leave a reply