சூர்யாவை இயக்கும் வெற்றிமாறன்.. சூரி படம் தள்ளிப்போகிறது?

by Chandru, Dec 5, 2019, 18:42 PM IST
தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தை இயக்கிய வெற்றிமாறன் அடுத்து காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதை நடிகர் சூரி உறுதி செய்ததுடன் இப்படத்தில் கதையும் வெற்றிமாறனும் தான் கதாநாயகன் என குறிப்பிட்டார். இப்படத்தின் ஷூட்டிங்கிற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
காப்பான் படத்தையடுத்து சூரரை போற்று படத்தில் சூர்யா நடித்து வந்தார். இப்படத்தையடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் தகவல் வந்தது. தற்போது அதற்கான வேலைகள் ஆரம்பமாகியிருக்கிறது. இப்படத்தை 100 நாட்களுக்குள் இயக்கி முடிக்க வேண்டும் என்று சூர்யா கேட்டு கொண்டதை வெற்றிமாறன் ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்.
சூர்யா நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்கவிருப்பதால் ஏற்கனவே இயக்குவ தாக இருந்த காமெடி நடிகர் சூரியின் படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்படு வதாக தெரிகிறது. சூர்யா படம் முடிந்த பிறகு சூரி படத்தை வெற்றி மாறன் இயக்க உள்ளாராம். இதுபற்றி இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வரும் என்று தெரிகிறது.

Leave a reply