லைகா அதிபர் வாழ்க்கை படத்துக்கு மணிரத்னம்- முருகதாஸ் மோதல்.. நேருக்கு நேர் பேசியதால் பரபரப்பு..

by Chandru, Dec 7, 2019, 19:06 PM IST
யார் முதலில் சொல்வது என்பதை பொறுத்து இப்போதெல்லாம் சினிமா கதை பற்றிய விவாதம், வம்பு, வழக்குகள் நடந்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ், அட்லி இயக்கும் படங்களுக்கு அதிக வரவேற்பு இருந்தாலும் ஒவ்வொரு படத்துக்கும் யாரோ ஒருவர் கதைக்கு உரிமை கொண்டாடி வழக்கு தொடுக்கிறார்கள்.
இந்நிலையில் லைகா சுபாஷ்கரன் வாழ்க்கை படத்தை எடுப்பதில் அவருக்கு எதிரிலேயே மணிரத்னம், முருகதாஸ் போட்டி போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினி நடித்த 2.0 படத்தை தயாரித்த லைகா சுபாஷ்கரன் தற்போது ரஜினிகாந்த நடிக்கும் தர்பார் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.
சுபாஷ்கரனின் பல்வேறு பொது சேவைகளை பாராட்டி மலேசியாவில் உள்ள ஏம்ய்ஸ் பல்கலைக்கழகம், சுபாஸ்கரனுக்கு கலாநிதி என்ற சிறப்பு கவுரவ படத்தை அளித்துள்ளது. அது தொடர்பாக அவருக்கு சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில் இயக்குனர் மணிரத்னம் கலந்துகொண்டு பாராட்டி பேசினார். அவர் கூறும்போது, 'சுபாஷ்கரனை நான் முதன் முதலாக சந்தித்த போது சாதாரண நிலையிலிருந்து இவ்வளவு பெரிய நிலைக்கு உயர்ந்தது பற்றி கேட்டேன். அப்போது தனது வாழ்க்கை சம்பவங்களை என்னிடம் கூறினார்.
அவரது கடின உழைப்பால் இவ்வளவு உயரத்துக்கு வளர்ந்திருக்கிறார் என்பது எனக்கு மகிழ்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. அவரது வாழ்க்கை கதையை நான் திரைப்பட மாக இயக்க எண்ணி உள்ளேன்' என்றார்.
பாராட்டு விழா நிறைவடையும் நேரத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவசர அவசரமாக வந்து நிகழ்ச்சியில் பங்கேற் றார். அதற்கு முன் யார் என்ன பேசினார் கள் என்பது தெரியாமல் பேசத் தொடங்கினார்.
முருகதாஸ் பேசியதாவது: உறவினர் திருமண விழா ஒன்றுக்கு சென்றவிட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதால் வேக வேகமாக வந்தேன். அதுதான் மூச்சிரைக்கிறது. (தண்ணீர குடித்துக்கொண்டார்). கத்தி படத்தை லைகா சுபாஷ்கரன் தயாரித்தார். அப்போது அவரைப்பற்றி எனக்கு சரியாக தெரியாது, போகப்போகத்தான் அவர் எவ்வளவு பெரிய தொழில் அதிபர் என்பது தெரியவந்தது.
கத்தி பட நேரத்தில் தமிழர்களுக்கு எதிராக என்னை சித்தரிக்க சிலர் முற்பட்டார்கள். ஆனால் அது நடக்கவில்லை. சுபாஷ்கரன் யார், தமிழர்களுக்கு எவ்வளவு நன்மை செய்திருக்கிறார் என்பதெல்லாம் தெரிய வந்தபிறகு சிலர் செய்யமுயன்ற சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது. இன்றைக்கு பல்வேறுபடங்களை தமிழில் தயாரித்து வருகிறார்.
இந்தியாவை அடிமையாக ஆண்ட இங்கிலாந்தில் இன்றைக்கு தமிழரான சுபாஷ்கரன் ஒரு ராஜாங்கமே நடத்திக் கொண்டிருக்கிறார். வெள்ளைக்கார நாட்டில் ஒரு தமிழனுக்கு இவ்வளவு மரியாதை கிடைத்திருப்பதை கண்டு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. சமீபத்தல் லண்டனில் தர்பார் பட விஷயமாக சென்றிருந்தேன்.
அப்போது சுபாஷ்கரன் அலுவலகத்துக்கு சென்றேன். மிகப்பெரிய அந்த கட்டித்தில் அவர் நடந்து சென்றபோது வெள்ளைக் கார ஊழியர்கள் அவருக்கு சல்யூட் அடித்தனர். அதைக்கண்டு சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொண்டேன். அப்போது நீண்ட நேரம் சுபாஷ்கரனுடன் தனியாக பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறி இருக்கிறார் என்பதை சொன்ன போது அதை ஒரு வாழ்க்கை படமாகவே எடுக்கலாம என்று எண்ணினேன் என்றார்.
(முருகதாஸ் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தவர்கள் நீங்கள் சொல்வதற்கு முன்பே மணிரத்னம் சுபாஷ்கரன் வாழ்க்கை படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்து விட்டார் என்றனர்) அதை கேட்டு அப்படியா... இருக்கட்டும், சுபாஷ்கரன் வாழ்க்கையை இரண்டு பாகமாக எடுக்க லாம். அவரது வாழ்க்கையில் அவ்வளவு சம்பவங்கள் இருக்கிறது என்று கூறினார்.
சுபாஷ்கரன் வாழ்க்கை படத்தை தான் இயக்க உள்ளதாக மணிரத்னம் அறிவித்த சில நிமிடங் களில் முருகதாஸும் அதேபோல் அறிவித் ததால் தர்ம சங்கடத்துக்குள்ளானார் மணிரத்னம். ஆனாலும் லேசாக சிரித்தபடி தனது தர்மசங்கடத்தை வெளிக்காட்டாமல் சமாளித்தார்.


More Cinema News