ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் கெஸ்டாக கலந்து கொண்டு நடிகர் ராகவா லாரன்ஸ் பேசினார். அவர் கூறியது:
நான் சிறுவயதிலிருந்தே தலைவரின்(ரஜினி) தீவிர ரசிகன். அவர் படம் ரிலீஸ் ஆகும் போது, போஸ்டர் ஒட்டும்போதும் சண்டை போட்டிருக்கிறேன். இங்கு சொல்வதில் தப்பில்லை. கமல்சார் பட போஸ்டர் ஒட்டினால் அதில்போய் சாணி அடிப்பேன். அப்போது என் மனநிலை மை அப்படி இருந்தது. இப்போது பார்க்கும்போதுதான் அவர்கள் இரண்டு பேரும் எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் என்பது. இரண்டு பேரும் கை பிடிச்சி நடக்கும்போதெல்லாம் வேற ஏதோ நடக்கப்போகுதுன்னு தோணுது. அவ்வளவு தீவிரமான ரசிகனாக இருந்த என்னை இப்போது முதல் வரிசையில் உட்கார வைத்து அழகு பார்க்கிற ஒரே மனிதர் சூப்பர் ஸ்டார்தான்.
எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் என்னை சீண்டி அரசியல் கத்துக்க வெச்சுடா தீங்க. ரஜினியை யார் தவறாக பேசினாலும் நான் அதற்கு பதில் சொல்வேன்.
2017ல் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினிசார் சொல்லும்போது கூட, அந்த மேடையில் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி மற்றவர்களை புகழ்கிறார்.
மு.க.ஸ்டாலின் தொடங்கி எனக்கு அவர் பெயர் சொல்ல பிடிக்க வில்லை (இயக்கனர் சீமான்) வரை அனைவரையும் புகழ்ந்துள்ளார்.
முரசொலியில் ரஜினியைப்பற்றி தவறாக எழுதினார்கள். பின்னர் வருத்தம் தெரிவித் தனர். அதற்கு மு.க.ஸ்டாலின் பயந்து விட்டார் என்று அர்த்தமல்ல. அது ரஜினி மீதுள்ள மரியாதை.
இவ்வாறு லாரன்ஸ் பேசினார்.
இவ்வாறு லாரன்ஸ் பேசினார்.
லாரன்ஸின் இந்த பேச்சுசர்ச்சையாகி உள்ளது. கமல் ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.