வெளிநாட்டு காரில் ட்ரிபிள் பைவ் சிகரெட் பிடித்து சென்ற ரஜினி... அவமானத்துக்கு பதிலடி..

Rajini speach at Darbar Audio Release

by Chandru, Dec 9, 2019, 16:46 PM IST
தர்பார் விழாவில் பேசிய ரஜினிகாந்த் தனது பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார். அப்போது தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத இரண்டு விஷயங்களை இந்த விழாவில் சொல்கிறேன். முதல் விஷயம் நான் சென்னைக்கு வந்தது பற்றியது. கன்னட மீடியத்தில் படித்து வந்த என்னை திடீரென்று ஆங்கில மீடியத்தில் சேர்த் தார்கள்.
இதனால் படிப்பில் பின் தங்கினேன். அதைகண்டு என் அண்ணன் என்னை ஒரு பணக்கார காலேஜில் சேர்த்து விட்டார். அங்கு என்னைப்போல் படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்தவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றினேன். கஷ்டப்பட்டு எனக்கு என் அண்ணன் காலேஜ் ஃபீஸ் கட்டினார். எக்ஸாம் எழுதினால் பாஸ் ஆக மாட்டேன் என்று எனக்குத் தெரிந்தது. நடு இரவில் பெங்களூருவிலிருந்து ரயில் ஏறினேன். அது தமிழ்நாடு மெட்ராஸூக்கு போகும் ரயில் என்றார்கள். ஏறிவிட்டேன்.
ரயிலில் இருந்து இறங்கும்போது டிக்கெட்டை தொலைத்து விட்டேன். அப்போது எனக்கு கன்னடம் மட்டும் தான் பேசத் தெரியும். டிக்கெட் செக் செய்பவரிடம் டிக்கெட்டை தொலைத்து விட்டேன் என்று சொல்லியும் நம்ப வில்லை. அப்போது வந்த சில கூலி ஆட்கள் எனக்கு ஆதரவாக பேசினார்கள். பிறகு தான் டிக்கெட் செக்கர் என்னை போகச் சொல்லி தமிழ்நாட்டு மண்ணுக்குள் விட்டார்.
டைரக்டர் கே.பாலசந்தர் சார், ரஜினிகாந்த் என்ற பெயரை நல்ல நடிக்கனுக்கு வைக்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் என் மீது அந்த நம்பிக்கையை வைத்து இந்தப் பேரை எனக்கு வைத்தார். ரஜினிகாந்த் என்ற பெயரை வைத்த பாலச்சந்தர் சாருக்கு நன்றி. என்னை ஹீரோவாக நம்பி அறிமுகம் செய்தவர் கலைஞானம். அவர்களுக்கும் நன்றி. என்மேல் ரசிகர்கள் வைத்திருக்கிற நம்பிக்கை என்றும் வீண் போகாது.
16 வயதினிலே படத்தில் நான் ஏற்று நடித்த பரட்டை கதாபாத்திரம்தான் என்னை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு போய்ச் சேர்த்தது. அப்படத்தில் எனக்கு ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கூடத் தராமல் நடிக்க வரச் சொன்னார்கள். பணம் தராமல் என்னை அவமானப்படுத்தினார் கள். அப்போதுதான் நினைத்தேன். ஒரு நாள் பெரிய ஆள் ஆகி ஏவிஎம் ஸ்டுடி யோவில் கால்மேல் கால் போடவில்லை என்றால் நான் ரஜினி இல்லை என்று முடிவு செய்தேன்.
அதே போல், ஃபாரின் கார், ஃபாரின் ட்ரைவர் என முன் சீட்டில் உட்கார்ந்துக் கொண்டு. விடுறா வண்டிய.. என்று ஏவிஎம் ஸ்டுடியோ நோக்கி சென்று டிரிப்பிள் பைப் சிகரெட் பிடித்தேன். கவர்னர்தான் வந்து விட்டார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள். அதன் பிறகு பாலச்சந்தரை பார்க்கப் போனேன்.
2 வருடத்தில் நான் சாதித்தேன் என்று சொல்வது தப்பாகிவிடும். அந்த நேரத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர்கள், ஏற்று நடித்த பாத்திரம், கதை என எல்லாம் சரியாக அமைந்தது அதுதான் காரணம். நம்மால் தான் வெற்றி என்றால் அது 10% தான். வெற்றி என்பது சந்தர்ப்பம், நேரம், சாணக்கியத்தனம்தான்.
இப்போது சமூகத்தில் நிறைய நெகட்டி விட்டி (எதிர்மறை சிந்தனை) இருப்பதும் பிறரைப் புண்படுத்துவதும் சகஜமாகி விட்டது. சினிமா, அரசியல் என எல்லா வற்றிலும். அன்பு செய்யுங்கள்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

You'r reading வெளிநாட்டு காரில் ட்ரிபிள் பைவ் சிகரெட் பிடித்து சென்ற ரஜினி... அவமானத்துக்கு பதிலடி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை