நடிகை ரைசா டேட்டிங் செய்ய விரும்பும் ஹீரோ... பிக்பாஸ் நட்பு காதாலாகிவிட்டதா?

by Chandru, Dec 9, 2019, 17:56 PM IST
Share Tweet Whatsapp
பிக்பாஸ் போட்டிக்கு சென்ற நடிகர் ஹரீஷ் கல்யாண்.  நடிகை ரைசா இருவருக்கும் காதல் என்று கிசு கிசு பரவியது. அந்த பப்ளிசிட்டி இருவருக்கும் சினிமாவில் பயன்பட்டது. பியார் பிரேமா காதல் என்ற படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர்.  
தற்போது திரைக்கு வந்திருக்கும் தனுசு ராசி நேயர்களே படத்தில் ஹரீஷ் கல்யா னுடன் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் ரைசா. அவரிடம், யாருடன் டேட்டிங் செய்ய விருப்பம் என்று யாருமே கேட்காத நிலையில் அவராகவே தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். ஹரீஷ் கல்யாணுடன்  டேட்டிங் செல்ல ஆசை என தன்னிச்சையாக தெரிவித் திருக்கிறார்.  
கூடவே இரண்டு ஹாட்டின் சிம்பள் வெளியிட்டு காதலுக்கு காதல் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார் ரைசா.
 
ரைசாவின் இந்த குசும்பை பார்த்த நெடிஸன்கள், பிக்பாஸ் நட்பு இருவருக்கும் காதலாக மலர்ந்துவிட்டதா என கேட்டிருக்கின்றனர்.

Leave a reply