ரஜினி படத்துக்கு இசை அமைத்துவிட்டு  அழுதேன்..  அனிருத் உருக்கமான பேச்சு..

by Chandru, Dec 9, 2019, 18:04 PM IST
Share Tweet Whatsapp

சென்னையில் நடந்த தர்பார் ஆடியோ விழாவில் கலந்துகொண்ட இசை அமைப்பாளர் அனிருத் உருக்கமாக பேசினார். அவர் கூறியதாவது:

தலைவருக்கு நல்ல ஆல்பம் கொடுக்குறீங் கன்னு பலர் என்னிடம் சொல்கிறார்கள். தலைவருக்காக நான் உயிரையே கொடுப் பேன், ஆல்பம் தர மாட்டேனா. நான் தலைவர் வெறியன். நான் நன்றாக மியூசிக் பண்ணுவேன் என்று 8 வருஷத்துக்கு முன்பு என்னை கண்டு பிடித்தவர் தனுஷ்சார்தான்.

அவருக்கு நன்றி. அவர் தான் என்னை அறிமுகம் செய்து வைத்தார். நான் ஒருபோதும் அழ மாட்டேன். ஆனால் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் அழுதுவிட்டேன். உலகத்துக்கே பிடித்த தலைவர் ரஜினிக்கு நான் இசை அமைத் திருக்கிறேன்.

அதை எண்ணியபோது என்னையும் அறியாமல் மகிழ்ச்சியில் அழுகை வந்தது. நான் தலைவர் ரசிகராக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார், அது ரஜினி சார்

இவ்வாறு அனிருத் கூறினார்..


Leave a reply