சென்னை சர்வதேச பட விழாவில் ஒரு டஜன் தமிழ் படம்.. தனுஷ், ஐஸ்வர்யா நடித்த படமும் திரையீடு..

by Chandru, Dec 10, 2019, 17:09 PM IST
Share Tweet Whatsapp
17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் இம்மாதம் 12ம் தேதி முதல் – 19ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. இதன் தொடக்க விழா கலைவாணர் அரங்கில் டிசம்பர் 12ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது.
தேவி, தேவிபாலா, அண்ணா திரையரங்கம், கேசினோ, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், தாகூர் பிலிம் சென்டர் ஆகிய இடங்களில் படங்கள் திரையிடப்படுகிறது.
 
இந்த விழாவில் 55 நாடுகளை சேர்ந்த 130 படங்கள் திரையிடப்படுகின்றன. பல்வேறு நாடுகளின் வெளி நாட்டு தூதர்கள் டில்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து வருகிறார்கள்.
 
வெளிநாட்டு இயக்குனர்கள் மற்றும் இந்திய திரைப்பட இயக்குனர் கள் பங்கேற்க உள்ளனர். அவர்களில் பாலாஸ்வர்கா (ஹங்கேரி), ஸ்ரீமதி. ஷில்பா ( சிங்கப்பூர்) பாரதிராஜா நடராஜா (மலேசியா), ஒய். ஸ்ரீநிவாஸ், (கர்நாடகா) சேத்தன் சிங் (மும்பை), கே எல். பிரசாத் (ஆந்திரா), ஸ்ரீமதி. ரஜ்னிபாசுமடரி (அசாம்) ஆகியோர் பங்கேற் பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
முதல் படமாக கேன்ஸ் விழாவில் வெற்றி பெற்ற பால்மே திஓர் மற்றும் கொரிய படம் தி பாராசைட் திரைப்படுகிறது. நிறைவு படமாக கண்டர்மான் – (ஜெர்மனி) காட்டப்படுகிறது, இதுதவிர ரஷ்யா, இத்தாலி, சீனா, ஆஸ்திரேலயா, ஈரான், பல்கேரியா, போலந்து, பெல்ஜியம், பிரான்ஸ் போன்ற நாடுகளின் படங்கள் திரையிடப்பட உள்ளன.
 
தமிழில் 12 படங்கள் திரையிட தேர்வாகி உள்ளன. அவற்றில் தனுஷ், மஞ்சுவாரியர்  நடித்த அசுரன், சமுத்திக்கனி நடித்த அடுத்த சாட்டை, விக்ராந்த் நடித்த பக்ரீத், வெற்றி நடித்த ஜிவி, ஐஸ்வர்யாரா ராஜேஷ் நடித்த கனா, பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு  மற்றும் சில்லுகுவார்ப்பட்டி, தோழர் வெங்கடேசன், மெய், பிழை, சீதகாதி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கது.

Leave a reply