நடிகை இந்துஜா வளர்ந்து வரும் நடிகை. மேயாத மான் படத்தில் அறிமுகமானார். பூமராங், மகாமுனி, மெர்குரி, பில்லா பாண்டி போன்ற பல படங்களில் நடத்திருக்கிறார். விஜய் நடித்த பிகில் படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து கவனத்தை ஈர்த்தார்.
இந்துஜா பற்றி திடீரென்று வந்த ஒரு தகவல் அவரை அப்செட் ஆக்கியிருக்கிறது. தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் வர்த்த ரீதியிலான படங்களில் மட்டுமே நடிக்க விரும்புவதாகவும், கலைப்படங்கள் அதாவது விருதுக்கான படங்களில் நடிக்க விரும்ப வில்லை என கூறுகிறாராம்.
இந்துஜாவா அப்படி சொன்னார் என்று யாராவது கேட்பதற்குள் முந்திக்கொண்டு அவரே டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: ஊடகங்கள் மிகவும் வலிமையானவை. அவைதான் சினிமாவின் முதுகெலும்பு என நான் நம்புகிறேன்.
ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் உண்மை என்று அப்பாவி மக்கள் நம்புகிறார்கள். எனவே ஏதோ எழுத வேண்டுமே என பேருக்காக எழுதாதீர்கள். சினிமாவை பைத்தியக்காரத்தனமாக காதலிப்பவள் நான். நீங்கள் சொன்னதுபோல மோசமான ஒரு விஷயத்தை நான் சொன்னதே இல்லை. வார்த்தைகள் அதிகம் காயப்படுத்தும்' என தெரிவித்திருக்கிறார்.