வீரம் பட நடிகர் திடீர் விவாகரத்து.. பாடகியை பிரிந்தார்..

by Chandru, Dec 11, 2019, 21:44 PM IST

அஜீத் நடித்த வீரம் படத்தில் நடித்தவர் அவரது தம்பியாக நடித்தவர் பாலா.

ஏற்கனவே இவர் காதல் கிசு கிசு, அன்பு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். பின்னர் மலையாள படங்களில் நடிக்கச் சென்றவர் அங்கு பல படங்களில் நடித்துள் ளார். கடந்த 2010ம் ஆண்டு மலையாள திரைப்பட பாடகி அம்ருதாவை மணந்தார். இவர்களுக்கு அவந்திகா என்ற குழந்தை உள்ளது.

ஒரு சில வருடங்களுக்கு பிறகு பாலாவுக்கும் அம்ருதாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 5 வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருவரும் விவாகரத்து பெற்று பிரிவது என முடிவு செய்தனர். இதையடுத்து எர்ணாக்குளம் குடும்ப நல கோர்ட்டில் விவகாரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று விவாகரத்து வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. மகள் அவந்திகா தாய் அம்ருதாவுடன் இருக்கவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


More Cinema News