நடிகை தயாரிக்கும் விஜய் தேவரகொண்டா படம்.. பாலிவுட் தயாரிப்பாளரை கூட்டு சேர்த்தார்..

by Chandru, Dec 12, 2019, 10:17 AM IST
நடிகை சார்மி தற்போது தெலுங்கில் படங்கள் தயாரித்து வருகிறார். புரிஜெகநாத் உடன் நெருக்கமான நட்புடன் இருக்கும் அவர் தற்போது விஜய் தேவர கொண்டா நடிக்கும் ஃபைட்டர் படத்தை தயாரிக்கிறார்.
புரி ஜெகநாத் இயக்குகிறார். தெலுங்கில் மட்டுமே உருவாவதாக இருந்த இப்படத்தை சார்மி தற்போது பலமொழி படமாக மாற்றியிருக்கிறார்.
இந்தி பட தயாரிப்பாளர், இயக்குனர் கரண் ஜோஹரை சமீத்தில் சந்தித்த சார்மி தங்களது படத்தில் மற்றொரு தயாரிப்பாளராக இணைய அவரிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தியிலும் இப்படத்தை ஒரே நேரத்தில் தயாரிக்கலாம் என ஐடியா சொல்ல அதைய கரண்ஜோஹர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். படத்தில் தானும் ஒரு தயாரிப்பாளராக இணைந்திருக்கிறார்.


More Cinema News

அதிகம் படித்தவை