தான் நடித்த ட்ரெய்லர் பார்த்து கதறி அழுத தீபிகா.. ஆசிட் வீச்சு பாதிப்பு கதாபாத்திரம்..

Deepika Padukone breaks down in tears at Chhapaak trailer launch ...

by Chandru, Dec 12, 2019, 10:22 AM IST
டெல்லியில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் லட்சுமி அகர்வால் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் தான் சபாக்.
பாஜிராவ் மஸ்தானி, சென்னை எக்ஸ்பிரஸ், பத்மாவதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த தீபிகா படுகோனே தற்போது நடித்துள்ள படம் சபாக். இந்த படத்தில் தீபிகா நடித்தது மட்டுமின்றி தயாரித்தும் உள்ளார் . தீபிகா படுகோனே உடன் விக்ராந்த் மாஷி நடித்துள்ளார் .
மேக்னா குல்சார் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர் . 'ராஸி' படத்தை இயக்கிய மேக்னா குல்சார் இயக்கியுள்ளார் .
கதைப்படி தீபிகா படுகோனே 2005 ஆம் ஆண்டு டெல்லியில் ஒரு தெருவில் ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்படுகிறார் . இவர் மீது ஆசிட் ஏற்படுத்தியவர் தன்னை விட 2 மடங்கு வயதில் மூத்தவன் . தீபிகா அவனின் காதலை ஏற்க மறுத்ததால் இந்த கொடூர சம்பவம் . அதன் பிறகு வீட்டிலேயே முடங்கிக்கிடந்த தீபிகா தனக்கு நடந்த இந்த செயல் வேறு எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாது என எண்ணி ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெறுகிறார் . மேலும் ஆசிட் தாக்குதலுக்கு எதிராகவும் , விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார் .
இந்த படம் பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிப்பது மட்டுமின்றி அவர்களின் கருணை, பலம், நம்பிக்கை உள்ளிட்ட விஷயங்களையும் மையப்படுத்துவதாக இருக்கும் சபாக் திரைப்படம் 2020 ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வருகின்றது . முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.
ட்ரெய்லரை முதன்முறையாக பார்த்தும் தீபிகா படுகோனே கண்ணீர் மல்க கதறி அழுதார்.

You'r reading தான் நடித்த ட்ரெய்லர் பார்த்து கதறி அழுத தீபிகா.. ஆசிட் வீச்சு பாதிப்பு கதாபாத்திரம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை