சினிமாவிலிருந்து பிருத்விராஜ் ஓய்வு.. ஷாக் ஆயிடாதீங்க விஷயம் தெரியுமா?

by Chandru, Dec 12, 2019, 10:32 AM IST
தலைப்பை படித்தவுடன் அப்படியா என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். சினிமா பணிகளிலிருந்து அடுத்த 3 மாதத்துக்கு முற்றிலுமாக ஓய்வு எடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ள தகவல்தான் இது.
அபியும் நானும், கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், மொழி போன்ற படங்களில் நடித்தவர் பிருத்விராஜ். தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கம் முதல் படுபிஸியாக இருந்து வருகிறார் பிருத்விராஜ். நடிப்பு தவிர பட தயாரிப்பு மற்றும் லுசிபெர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் என கூடுதல் பணிகளையும் கவனித்தார். தொடர்ந்து பிரதர்ஸ் டே, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் அய்யப்பனம் கொஷியும் படங்களில் நடித்தார். அடுத்து ஆடுஜீவிதம் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு முன்பாக 3 மாதம் படப்பிடிப்பில் பங்கேற்காமல் ஓய்வு எடுக்க முடிவு செய்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது,'படப்பிடிப்பு தளத்திலிருந்து திரும்பிவிட்டேன். கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு பொய் சொல்ல தெரியாது. அடுத்த 3 மாதத்துக்கு சினிமாவிலிருந்து நான் முழுமையாக ஓய்வு எடுக்க உள்ளேன். இதுவொரு இடைவெளி. தினம்தினம் படப்பிடிப்பு செல்லும் எண்ணத்திலேயே இருந்து வந்தேன். ஆம் இந்த இடைவெளிக்கு எனக்கு ஒரு உடற்பயிற்சி போன்றதாக அமையும்.
எனக்கு மிகவும் பிடித்த ஆடுஜீவிதம் படத்திற்காக இந்த ஓய்வு எனக்கு தேவைப்படுகிறது. ஆனால் அடுத்த 3 மாதமும் படப்பிடிப்புக்கான பணிகளில் மட்டுமே இருக்க மாட்டேன். நான் சந்தோஷமாக இருக்கிறோனா இல்லையா என்பது தெரியாது. பழைய நினைவுகளையும், தொலை தூரங்களையும் இதில் அலசிப்பார்ப்பேன்' என்றார்.


More Cinema News

அதிகம் படித்தவை