ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாளில் அவரது மனைவி லதாரஜினிகாந்த் தனது மனமார்ந்த வாழ்த்தினை பகிர்ந்திருக்கிறார். 'எனது உயிர், எனது வாழ்க்கை, எனது தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என குறிப்பிட்டிருக்கிறார்.
மூத்தமகள் ஐஸ்வர்யா கூறும்போது, 'அப்பா உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் புன்னகையை காண என்றென்றும் உங்களை பின்தொடர்வேன்' என தெரிவித்திருக்கிறார்.
மகள் சவுந்தர்யா கூறும்போது,'என் வாழ்க்கையும் என் தந்தையும் என்னுடைய எல்லாமுமானவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என கூறியிருக்கிறார்.
'நான் உலகில் அதிகம் நேசிக்கும் ஒரே மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அன்றும், இன்றும் என்றும் ஒரேயொரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்' என இசை அமைப்பாளர் அனிருத் தனது வாழ்த்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் இயக்குனர்கள் வெங்கட்பிரபு, அட்லி பல்வேறு திரையுலக பிரபலங்கள் ரஜினிக்கு வாழ்த்து கூறி உள்ளனர்.
சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன் இன்று காலை ரசிகர்கள் மன்ற கொடிகளுடன் கூடினார்கள். அவர்களுக்கு லதா ரஜினிகாந்த் இனிப்பு வழங்கினார்.
ஏற்கனவே தர்பார் படப்பிடிப்பில் பேசிய ரஜினிகாந்த் தனது இந்த 70வது பிறந்த தினம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. அதை ரசிர்கள் நற்பணிகள் வழங்கி கொண்டாடுங்கள் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து வெளியூர்களிலிருந்து ரசிகர்கள் யாரும் சென்னை வரவில்லை. அந்தந்த ஊர்களில் கேக் வெட்டியும், நற்பணிகள் வழங்கியும் ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
இதற்கிடையில் ரஜினிகாந்த் வீட்டில் தொடர்பு கொண்டு பலர் அவருக்கு போனில் வாழ்த்து தெரிவிக்க முயன்றனர். ஆனால் ரஜினிகாந்த் வெளியூர் சென்றுவிட்டதாக வீட்டில் இருந்தவர்கள் பதில் அளித்தனர்.