குஷ்பு, நக்மா, குத்து ரம்யா தொடங்கி விந்தியா, நமீதா வரை பல நடிகைகள் அரசியலில் குதித்துவிட்டனர். நடிகை நயன்தாராவுக்கு சில வருடங்களுக்கு முன்பே அப்படியொரு வாய்ப்பு வந்ததாம்.
அறம் என்ற படத்தில் நயன்தாரா கலெக்டர் வேடத்தில் நடித்தார். ஆழ்துளை கிணற்றில் குழந்தை சிக்கிக்கொள்ள அதை மீட்பதற்காக கலெக்டர் என்ற முறையில் எல்லா வேலைகளையும் முன்னின்று அவர் செய்வார். அதற்கு அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவர் மீது விசாரணையும் நடத்தப்படும் அப்போது தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் குதித்து மக்களுக்கு சேவை செய்ய வருவதுபோல் கிளைமாக்ஸில் காட்சி முடிக்கப்பட்டிருக்கும். அதன் 2ம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப் பட்ட நிலையில் அதுபற்றி எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
நயன்தாரா அரசியல்வாதிகளை எதிர்ப்பது போல் அறம் படத்தில் நடித்திருந்ததால் அவருக்கும் அரசியல் சாயம் பூசப்பட்டது. அப்போதே அம்மா கட்சியிலிருந்து நயன்தாராவுக்கு அழைப்பு வர அதை அவர் ஏற்க மறுத்துவிட்டாராம். இந்நிலையில் சமீபத்தில் மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது ரகசியமாக அவரை சந்தித்த உள்ளூர் பா.ஜ தலைவர் தங்கள் கட்சியில் இணையும்படி அவரை கேட்டாராம்.
அதற்கும் பதில் சொல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டாராம் நயன்தாரா. இந்த தகவலை கேள்விப்பட்ட வேறு சில அரசியல் கட்சிகளும் நயனை தங்கள் கட்சியில் சேர்க்க தூதுவிட்டிருக்கிறார்களாம்.