ரஜினி நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். அடுத்தகட்டமாக தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். டெல்லியில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் முக்கிய காட்சிகளில் பங்கேற்று நடித்தார் மாளவிகா.
திடீரென்று அவர் இந்தியில் நடிக்கச் சென்றுவிட்டாரோ என்று ரசிகர்கள் ஆச்சர்யம் எழுப்பி உள்ளனர். இந்தி நடிகர் ரன்பீர் கபூருடன் நெருக்கமாக மாளவிகா மேனன் நிற்பதுபோன்ற புகைப்படங்கள் நெட்டில் வலம் வருவதுதான் ஆச்சர்யத்துக்கு காரணம்.
என்ன, ஏது என்று விசாரித்தபோது விளம்பர படமொன்றுக்காக ரன்பீரை மாளவிகா சந்தித்த போது இப்படம் எடுக்கப்பட்ட தாக தெரிகிறது. ஏற்கனவே டாப்ஸி, கீர்த்தி சுரேஷ் என பல தென்னிந்திய நடிகைகள் இந்தியில் நடிக்கின்றனர். அதிர்ஷ்டம் இருந்தால் மாளவிகா மோகனனுக்கும் இந்தி யோகம் அடிக்க லாம் என்கிறது திரையுலக வட்டாரம்.