சீமான் மீது மீண்டும் ராகவா லாரன்ஸ் தாக்கு...ரஜினி பிறந்த நாள் விழாவில் பரபரப்பு..

by Chandru, Dec 13, 2019, 18:36 PM IST
ரஜினியின் 70-வது பிறந்த நாள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதில் பேசிய ராகவா லாரன்ஸ் மீண்டும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கிப் பேசினார்.
ஒருவர் எப்போது பேசினாலும் தான் மட்டுமே தமிழ்த் தாயின் மூத்த பிள்ளை என்கிறார் அப்படியென்றால் நாமெல் லாம் அமெரிக்கா தாய் பிள்ளைகளா? நாங்களும் தமிழ்த் தாயின் பிள்ளைகள் தான். யாரை விமர்சிக்கிறோம் என்று அந்த பெயரைச் சொன்னால் தான் ஆம்பளைன்னு சொல்லுவாங்க. அவங்க பெயரை சொல்லித்தான் நான் ஆம்பளை என நிருபிக்க வேண்டுமா. நான் ராயபுரத்தில் பிறந்தவன் எப்படிவேண்டு மானாலும் பேச முடியும் என்றார் லாரன்ஸ்.
ரஜினியை தாக்கி பேசி வரும் சீமானை மறைமுகமாக லாரன்ஸ் தாக்கி பேசிய தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன் ரஜினி நடித்துள்ள தர்பார் பட ஆடியோ வெளி யீட்டு விழாவில் பேசிய ராகவா லாரன்ஸ், 'ரஜினியின் தீவிர ரசிகன் நான். சிறுவயதில் கமல்ஹாசன் சினிமா பட போஸ்டர் மீது சாணி அடித்தேன்' என பேசி பின்னர் அதற்கு விளக்கம் அளித்தார். மேலும் ரஜினிக்கு எதிராக சீமான் பேசியதையும் அவரது பெயரை சொல்லாமல் மறைமுக மாக கண்டித்தார் லாரன்ஸ்.
இதையடுத்து சீமானின் நாம் தமிழர் கட்சியினர் லாரன்சை கண்டித்தும் தாக்கியும் நெட்டில் மெசேஜ் வெளியிட்டு வருகின்றனர்.

Get your business listed on our directory >>More Cinema News

அதிகம் படித்தவை