வில்லன் நடிகர் மகளின் நீச்சல் சாதனை..

by Chandru, Dec 14, 2019, 09:16 AM IST

தலைவாசல் படம் மூலம் அறிமுகான குணசித்ர நடிகர் விஜய் பின்னர் தலைவாசல் விஜய் என்ற பெயருடன் நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் இவர் வில்லன், குணசித்தர பாத்திரங்களில் தனக்கென ஒரு பாணி வகுத்து நடித்து வருகிறார்.

இவர் மகள் ஜெயவீனா. நீச்சல் வீராங்கனை. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்துவரும் இவர் 12 வயதில், ஜூனியர் நீச்சல் வீராங்கனையாக தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்றார்.

நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் சமீபத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் 50மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவு போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.


Leave a reply