கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இப்படம் விஜய் நடித்த பிகில் திரைக்கு வந்த தீபாவளி தினத்தில் திரைக்கு வந்தது. இரண்டு படமும் சரிக்குசரியாக போட்டிக்கு நின்றது. பிகில் படம் அதிகம் வசூலை ஈட்டினாலும் சில இடங்களில் கைதி படம் பிகில் படத்தைவிட அதிகம் வசூலித்தது.
இந்த பரபரப்புக்கு இடையே கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 64 பட இயக்குனர் பொறுப்பை ஏற்றார். அதன் படப்பிடிப்பு வேமாக நடந்து வருகிறது. இப்படம்பற்றி ரசிகர்கள் அவ்வப்போது படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் ஒரு சில சம்பவங்கள பற்றி மட்டுமே தகவல் வெளியாகிறது. பட தரப்போ, இயக்குனரோ வாய்திறக்காமல் கப்சிப் என்றிருக்கின்றனர்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கைதி படத்தின் 50வது நாள் போஸ்டரை லோகேஷ் வெளியிட்டார். அதற்கு பலரும் வாழ்த்து சொன்ன அதே நேரத்தில் விஜய் ரசிகர்கள் லோகேஷிடம் தளபதி 64 படத்தின் அப்டேட் கேட்டு அவரை துளைத்தெடுத்திருக்கின்றனர்.
50 நாள் ஆச்சில்ல கொண்டாடுவதற்கு எங்களுக்கு எதுவும் தளபதி 64 அப்டேட் சொல்லுங்க டைரக்டர் என அவரிடம் கேட்டிருக்கின்றனர். ஆனால் அதற்கு பதில் எதுவும் சொல்லாம் வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி கூறிவிட்டு நழுவிவிட்டார் லோகேஷ்.