கேப்மாரி படத்துக்கு பிறகு ஜெய், அதுல்யா ரவி ஜோடியாக நடிக்கும் படம் 'எண்ணித் துணிக'. இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நடந்தது. இப்படத்தின் மூலம் எஸ்.கே.வெற்றி செல்வன் என்ற புதியவர் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இவர் இயக்குநர் வசந்திடமும் ஒளிப்திவாளர் ரவி கே.சந்திரனிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர். ரெயின் அண்ட் ஏரோ என்டர்டெயிண் மெண்ட் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கிறார் படம் பற்றி இயக்குநர் கூறும்போது,'
திருக்குறளில் "எண்ணித் துணிக கர்மம்... " என்று துவங்கும் குறளில் இருந்து எடுக்கப்பட்ட, ' எண்ணித் துணிக' இப்படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு செயலில் ஈடுபடும் முன் எத்தனை முறை வேண்டுமானல் சிந்திக்க லாம். முடிவெடுத்தபின் அதிலிருந்து பின் வாங்கக்கூடாது என்பதை சொல்கிறது இந்தக் குறள். அதை மையப்படுத்திதான் இப்படத்தின் கதாநாயகன் கதிர் (ஜெய்) பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தகவல் தொழில் நுட்பக் கம்பெனி ஒன்றில் பணியாற்றும் ஜெய், அந்தக் கணத்துக்காக வாழ்கிறவர்.
அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் ஜெய்யின் அவரது காதலி அதுல்யா வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் சில ஆட்களுக்கு அதிரடியாக ஜெய் எப்படி பதிலடி தருகிறார் என்பதை த்ரில்லர் பாணியில் சொல்கிறது கதை. இதில் 'சீதக்காதி' படத்தில் அறிமுகமான நடிகர் வைபவின் அண்ணன் சுனில் ரெட்டி வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மற்றொரு எதிர்மறையான வேடத்தில் நடிக்க பிரபல நடிகர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடக்கிறது' என்றார் இயக்குநர் வெற்றி செல்வன்.