முக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..

by Chandru, Dec 14, 2019, 17:09 PM IST
Share Tweet Whatsapp

பிகில் படத்தில் கால்பந்தாட்ட சிங்கப்பெண் களில் ஒருவராக நடித்தவர் இந்துஜா. இவர் ரஜினியின் தீவிர ரசிகை. கடந்த 12ம் தேதி ரஜினியின் 70வது பிறந்த தினத்தை ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.  அன்றைய தினம் ரஜினி நடித்த பாட்ஷா, படையப்பா போன்ற சில படங்கள் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.

சென்னையில் உள்ள காசி தியேட்டரில் பாட்ஷா படம் திரையிடப்பட்டது. அப்படத்தை பார்க்க முகத்தில் முக்காடு போட்டுகொண்டு யாருக்கும் தெரியாமல் தியேட்டருக்கு சென்றார் இந்துஜா. அங்கு ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டுகொள்ளாதபடி அமர்ந்திருந்தார்.  படம் தொடங்கு வதற்காக பெல் அடிக்கப்பட்டு பாட்ஷா என்று டைட்டில் போட்டபிறகு அடுத்ததாக,  நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் என்ற பாடல் வந்தபோது முக்காடைகழற்றி விட்டு கூச்சல்போட்டு விசில் அடித்து ஆட்டம்போட்டார் இந்துஜா. அதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டிருக்கிறார்.

'எப்படியோ, தான் ஒரு ரஜினி ரசிகை என்பதை இந்துஜா வெளிப்படுத்திவிட்டார் அடுத்தது ரஜினி பட வாய்ப்பு வருமா என்பதுதான் அவரது எதிர்பார்ப்பாக இருக்கும்' என்கின்றனர் ரசிகர்கள்.


Leave a reply